ரஷ்யா அடுத்தடுத்த தாக்குதல்.! உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி தவிப்பு.!
ரஷ்யா மேலும் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு.
உக்ரேனிய எரிவாயு மற்றும் மின்சார உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் உக்ரைனின் மின்சார கட்டடம் தாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான உக்ரரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார்.
போருக்கு முன் உக்ரைன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செலன்ஸ்கி இது குறித்து கூறியதாவது, ரஷ்யாவின் இந்த தாக்குதலில் ஒடெசா, வின்னிட்சியா, சுமி மற்றும் கீவ் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குரூஸ் ஏவுகணைகள், ஐந்து வான்வழி ஏவுகணைகள் மற்றும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஐந்து ஷாஹெட்-136 ட்ரோன்கள் உக்ரைனில் தாக்கியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த வான்வழித் தாக்குதல்களால் மின்சாரக் கட்டத்தை முழுதுமாக முடக்குவதுடன், மற்ற எரிசக்தி உள்கட்டமைப்புகளும் தாக்கப்படுவதை இலக்காகக்கொண்டு ஏவப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.