கிரிமியா பாலம் தகர்ப்பு.! மீண்டும் ருத்ர தாண்டவமாடும் ரஷ்யா.! உருக்குலைந்து நிற்கும் உக்ரைன்.!
கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீண்டு கொண்டிருக்குறது. சில மாதங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்த இந்த போர் விவகாரம். தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா எனும் பகுதியை உக்ரைன் கைப்பற்றியது . பின்னர் அந்த கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க, கடந்த 2018ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.
இந்த ரஷ்ய பாலமானது கடந்த சனிக்கிழமை போரின் தாக்கத்தால் சேதமடைந்தது. இதில் கோபமான ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மீது மீண்டும் தனது யுத்த ருத்ர தாண்டவத்தை காட்டி வருகிறது.
இதுவரை, ரஷ்யா 84 ஏவுகணைகளை உக்ரைன் மீது போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் உக்ரைன் நாட்டில், குடியிருப்புகள், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், சாலை , வாகனங்கள் என சரமாரியாக சேதமடைந்துள்ளன. இதுவரை 10 பொதுமக்கள் இதில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை மேற்கத்திய நாடுகள் பதிவு செய்து வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அதிபர் புதின், ரஷ்யா மீது தாக்குதல் யாரேனும் நடத்தினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என கூறியுள்ளார்.