ரஷ்யா : வாக்னர்படை தலைவர் மரணம்.. எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.! எலான் மஸ்க் கருத்து.!

Elon musk

உக்ரைன் – ரஷ்யா  நாடுகளுக்கு இடையான போரில், ரஷ்யாவுக்கு துணையாக நின்ற படைகளில் ஒன்று வாக்னர் படை. இந்த படை தலைவர் பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கி ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது.

இந்நிலையில், வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அண்மையில் ஓர் விமான விபத்தில் உயிரிழந்ததாக நேற்று (புதன்கிழமை) செய்திகள் வெளியாகின. அந்த விமானத்தில் 10க்கும் மேற்பட்டர் உயிரிழந்ததாகவும், அந்த பெயர் பட்டியலில் எவ்ஜெனி பிரிகோஜின் பெயர் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் இறப்பு செய்தி குறித்து X சமூகவலைதள தலைமை அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில், நான் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்