உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது- ஜோ பைடன்.!
போரில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் வெற்றி பெற முடியாது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைகிற நிலையில், ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெற்றி கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஒரு சர்வாதிகாரி ஒருபோதும் மக்களின் சுதந்திர அன்பை அழிக்க முடியாது. உக்ரைனின் எதிர்காலத்தை பறிக்கும் முயற்சியில் ரஷ்யா போர் புரிந்தது.
உக்ரைன் மக்கள் இன்னும் சுதந்திரமாக தான் இருக்கிறார்கள், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நிலப் போர் உக்ரைனில் தொடங்கியது என்று பைடன் கூறினார். திடீர் பயணமாக உக்ரைனுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.
அப்போது பைடன், ரஷ்யாவிற்கு அனுப்பிய செய்தியில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ அழிக்கவோ முயலவில்லை. இந்தப் போர் அவசியமில்லை, போரை முடித்துக்கொள்ள ரஷ்யா நினைத்தால் முடியும். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதை நிறுத்தினால், அது போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று பைடன் மேலும் தெரிவித்தார்.