தனது சொந்த நகரம் மீது குண்டு வீசிய ரஷ்யா.! அங்கு என்ன நடக்கிறது…

Default Image

ரஷ்யா நேற்று தனது சொந்த நகரத்தின் மீது தவறுதலாக வெடிகுண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு வருடமாக உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷ்யா, உக்ரைனின் எல்லைக்கு அப்பால் உள்ள 400,000 மக்கள் வசிக்கும் தெற்கு ரஷ்ய நகரமான மத்திய பெல்கொரோட் மீது, வானத்தில் பறந்து கொண்டிருந்த போர் விமானத்தில் இருந்து, வெடிகுண்டு விழுந்ததில் 40 மீட்டருக்கு பெரிய பள்ளம் உருவானது.

அதிர்ஷ்டவசமாக, இந்த குண்டு வெடிப்பில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் கட்டிடங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன. அந்த நகரில் 4 லட்சம் மக்கள் தொகை உள்ளது. ஆரம்பத்தில், இந்த சம்பவம் உக்ரைன் மீது எழுந்தது, அதாவது உக்ரேன் ராணுவம் தான் இந்த இடத்தை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் இன்று காலை, இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், நேற்று இரவு 10 மணியளவில் பெல்கோரோட் மீது பறந்த ரஷ்ய போர் விமானம், தற்செயலாக வெடிகுண்டுகளை வெளியேற்றியதாக ஒப்புக்கொண்டது. மேலும், இந்த ஜெட் ‘Su-34’ என அடையாளம் காணப்பட்டது, இது மிகவும் மேம்பட்ட ரஷ்ய விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்