உக்ரைனின் அருங்காட்சியகம் மற்றும் துறைமுகம். மீது ரஷ்யா தாக்குதல்..8 பேர் காயம்!
உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா நகரம் மீது ரஷ்யா ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் சுமார், 20 அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகமும் சேதமடைந்ததுள்ளது.
அது மட்டும்மல்லாமல், ஒரு தானிய கிடங்கு மற்றும் தானியங்களுடன் கூடிய லாரிகள் தீப்பிடித்து எரிந்தன, பின்னர் அது உடனடியாக அணைக்கப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் வழியாக உக்ரேனிய தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து மாஸ்கோ வெளியேறிய ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உக்ரைனின் முக்கிய தானிய துறைமுகமான ஒடேசாவும் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது.
தெற்கு ஒடேசா மற்றும் கெர்சன் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நான்கு வெவ்வேறு ஏவுகணைகளை ஏவியது என்று உக்ரேன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.