ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த ஒரு வருடமாக கடுமையான போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனில் இருந்து ஆப்பிரிக்கா,மற்றும் ஆசிய நாடுகளுக்கு தானியங்கள் செல்ல அனுமதிக்கும் கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்தியது.
இந்த கருங்கடல் ஒப்பந்தம் உக்ரேனிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அளித்தது. இதனால் உணவு பொருட்களின் ஏற்றுமதி எளிதாக மாறியது. இந்நிலையில், கருங்கடல் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்தது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்குச் செல்லும் பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி, பின்னர் உக்ரைன் படைகள் மீது பழி சுமத்தலாம் எனவும் உக்ரைன் துறைமுகங்களில் ரஷ்யா கூடுதல் கடல் கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளிடம் தகவல் உள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்த எச்சரிக்கை வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை, கடலின் மேற்பகுதியில் உலாவும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குவதற்கு ராக்கெட்டுகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததது.
இந்நிலையில், தற்போது ருமேனியாவில் இருந்து டான்யூப் ஆற்றின் குறுக்கே உள்ள உள்நாட்டு துறைமுகம் உட்பட ஒடெசா பிராந்தியத்தின் இஸ்மாயில் துறைமுகங்களை ரஷ்யா தாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு உலகளாவிய தானிய விலைகள் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன், உக்ரேனிய தானியமானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், ரஷ்யா கொலை, பட்டினி மற்றும் பயங்கரவாதத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்கிறது என்று கூறியுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் ஆனது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தாக்குதல் நடத்தியதை அடுத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…