ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

கசானில் உள்ள பல மாடி கட்டிடங்களில் ஆளில்லா விமானங்கள் மோதும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

High Rise Residential Building in Kazan

ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள நகரத்தின் பெரிய பில்டிங் மீது வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் மோதி வெடித்து சிதறியது. இதனால் நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது ரஷ்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் கசான் நகரத்தில் உக்ரைன் நடத்திய, இந்த ஆளில்லா ட்ரோன் தாக்குதல் 9/11 பாணியில் இருப்பதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த கசான் நகரம் மாஸ்கோவிலிருந்து கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருக்கும் பல மாடி கட்டிடங்கள் மீது, ட்ரான் மோதும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த பயங்கர தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழந்தனரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கடி, இவ்வாறு பதட்டமான சூழ்நிலை இந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்