Categories: உலகம்

ரஷ்யாவில் தொடரும் போராட்டம்.! அலெக்ஸி நவல்னியின் உடலில் மர்ம காயங்கள்.?

Published by
மணிகண்டன்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் தற்போது ரஷ்யாவை தாண்டி உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. நவல்னியின் மரணம் பற்றிய செய்தியில் வெளிப்படை தன்மை இல்லை. அவர் இறப்புக்கு புதின் கரணம், விஷம் கொடுத்து மர்மமான முறையில் நவல்னி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற பல்வேறு குற்றசாட்டுகளை நவல்னி ஆதரவாளர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யாவின் கடும் குளிர் பகுதி சிறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்ட நவல்னி , கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்தது. அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவரும்  தீவிரவாத நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார் அலெக்சி நவல்னி.

சனிக்கிழமை உயிரிழந்த இவரின் உடல் இன்று (திங்கள்) அன்று தான் வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவ சோதனைகளுக்காக வெளியில் கொண்டு வரப்பட்ட நவல்னி உடல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பான போராட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடும் குளிர்.. வெறும் 10 நிமிடம் தான்.. ரஷ்ய சிறை பற்றி இறப்புக்கு முன்னரே கூறிய அலெக்ஸி நவல்னி.!

அலெக்ஸி நவல்னியின் மரணம் பற்றியும், உடலை கண்ட மருத்துவர் கூறிய செய்திகள் கொண்டும் ரஷ்ய தனியார் செய்தி நிறுவனமான Novaya Gazeta Europe எனும் பத்திரிகை தளம் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், வழக்கமாக ஆர்டிக் சிறையில் ஒருவர் உயிரிழந்தால், அவரது உடல்  பிரேத பரிசோதனைக்காக கிளாஸ்கோவா தெருவில் உள்ள தடயவியல் மருத்துவப் பணியகத்திற்கு முதலில் கொண்டு செல்லப்படும். ஆனால் , அதற்கு மாற்றாக அலெக்ஸி நவல்னியின் உடல் முதலில் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள லாபிட்னாங்கி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் சலேகார்ட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது என்றும், இதனால் ஆரம்பம் முதலே நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் , உயிரிழந்த நவல்னி உடலை பரிசோதித்த துணை மருத்துவர் கூறுகையில், நவல்னி உடலில் தலை மற்றும் மார்பு பகுதியில் காயம் இருந்ததாகவும், இந்த  காயங்கள் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அதனை சிலர் கட்டுப்படுத்த முயற்சித்தபோது ஏற்பட்ட காயமாக கூட இருக்கலாம் என்றும் கூறினார்.

இருந்தும், இறப்பு குறித்த உறுதியான தகவல்கள் பற்றி அறிய, நவல்னி உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். ஆனால், அரசியல் ரீதியாக பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், இன்னும் பிரேத பரிசோதனை நடைபெறாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தாமதம் நவல்னி மரணம் குறித்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அலெக்ஸி நவல்னியின் சட்டக்குழு கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் கொல்லப்பட்டதாகவும், அதனால்தான் அவரது மரணத்திற்கான காரணத்தை அதிகாரிகள் வெளிப்படையாக கூற மறுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அலெக்ஸி நவல்னி மரணத்திற்கு பின்னர், அதிபர் புடினுக்கு எதிராக  ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதுவரையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக நாடு முழுக்க பல்வேறு பகுதியில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்கள் பலர் காவல்துறையினரின் அடக்குமுறையை எதிர்கொண்டதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

8 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

35 minutes ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

60 minutes ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

4 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

5 hours ago