அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன் – ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றபின், அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார் ஜோ பைடன்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய தருணம் இருக்கிறது. அவர்களின் அடிப்படை சுதந்திரத்திற்காக எழுந்து நிற்க வேண்டும். அமெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே தனது வேலை. இது எங்களுடையது என்று நான் நம்புகிறேன், அதனால் தான் அடுத்தாண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறேன் என அறிவித்துள்ளார்.