பாகிஸ்தானின் பட்ஜெட் மதிப்பீடுகளில், ரூ.2 லட்சம் கோடி மீறல்-ஐஎம்எஃப்

Default Image

2022-23 ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தானின் பட்ஜெட் மதிப்பீடுகளில், ரூ.2 லட்சம் கோடி மீறல் நடந்துள்ளதாக ஐஎம்எஃப் கண்டறிந்துள்ளது.

பாகிஸ்தானின் 2022-23 ஆம் நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீடுகளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கண்டறிந்துள்ளது. இது முதன்மை மற்றும் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கச்செய்யும் என்பதால் ஐஎம்எஃப்(IMF) எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) அதிகாரிகள் இது குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது நிதிச் சரிவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின் நிலை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தி நியூஸ், வெளியிட்ட செய்தியின் படி, ஒரு சிறிய பட்ஜெட் மூலம் 600 பில்லியன் (60,000 கோடிரூபாய்) மதிப்பிலான கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தான் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் 65 பில்லியன் ரூபாய் எரிபொருள் விலை சரிசெய்தலை, பாகிஸ்தானின் கூட்டணி அரசாங்கம் மீட்டெடுக்கவில்லை என்று ஐஎம்எஃப் கூறியுள்ளது. ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு அரசாங்கம் சலுகை விலையில் மின்சாரம் மற்றும் எரிவாயுவை வழங்கியதால் நாட்டின் தேவை 110 பில்லியன் வரை அதிகரித்தது.

பாகிஸ்தான் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது, ஏனெனில் அதன் கையிருப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலைக்கு குறைந்துள்ளது மற்றும் இந்த இயல்புநிலையைத் தவிர்க்க பொருளாதார அவசர ஆதரவு நிலை தேவைப்படுகிறது.

ஐஎம்எப் தான் பாகிஸ்தானைக் காப்பாற்றும் ஒரே வழி, ஆனால் பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில், நிதி மேலாண்மையில்  பாகிஸ்தான் அதிக முன்னேற்றம் அடையத் தவறியதால், ஐஎம்எஃப் தனது பணப் பட்டுவாடாவை நவம்பரில் நிறுத்தியது.

பாகிஸ்தான் அதன் இருப்புத்தொகையை அதிகரிக்க ஐஎம்எப்-இன் நிதியை பெறுவதில் கவனம் செலுத்துகிறது, இதனால் பாகிஸ்தானின் உடனடி தேவைகளை நிர்வகிக்க முடியும், ஆனால் அடுத்த நிதியாண்டில் இதேபோன்ற நிதி நெருக்கடியை சமாளிக்க, இது போதுமானதாக இருக்காது, இதனால் பாகிஸ்தான் ஐஎம்எப்-இன் நிதியைப்பெறும் காலத்தை நீட்டிப்பதால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்