சவூதி:கொரோனா பரவல் காரணமாக சப்ளை வேலை செய்யும் ரோபோக்கள்…!

Default Image

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சவூதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை வேலைக்கு ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பரவலானது கடந்த ஆண்டை விட,தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,சவூதி அரேபியாவின் ஜாசன் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மனிதர்களுக்குப் பதிலாக சப்ளை வேலைக்கு ரோபோக்கள் சேர்க்கப்படுகின்றன.

இந்த ரோபோக்கள்,வாடிக்கையாளர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றன.வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்தார்களோ அவற்றை தாமதிக்காமல் உடனே கொண்டு வந்து கொடுக்கின்றன.

இதனையடுத்து,வெள்ளை நிறத்தில் உள்ள இந்த ரோபோக்கள் உணவுகளை கையில்  வைத்துக் கொண்டு அங்குமிங்கும் செல்வதினால்,பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் ரேகம் ஓமர் கூறுகையில்,”இந்த ரோபோக்களானது அருகில் உள்ள அனைத்தையும் உணர்ந்து செயல்படக் கூடியது.மேலும்,ஹோட்டலின் விதிமுறைகளையும் நன்கு புரிந்து கொண்டுள்ளது.எனவே,வாடிக்கையாளர்கள் இந்த ரோபோக்களை மிகவும் விரும்புகின்றனர்”,என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை வேலைக்கு வைப்பதனால் மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று சவுதியில் உள்ள மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்