Rishi Sunak [Imagesource : Businesstoday]
இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட பயங்கரமானது என்றும் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, காஸாவில் மருத்துவமனை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து செல்ல உள்ளார். இஸ்ரேல் செல்லும், பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…