பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் இறுதி பேச்சு.! 2 முக்கிய பதவிகள் ராஜினாமா.!
UK தேர்தல்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரிட்டன் பிரதமர் பதவி ஆகியவற்றில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நிறைவு பெற்று இன்று முடிவுகள் வெளியாகின. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்து விலகியுள்ளது.
அதே 14 ஆண்டுகளுக்கு பின்னர் தொழிலாளர் கட்சி பிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. புதிய பிரதமராக கீர் ஸ்டார்மன் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இங்கிலாந்தில் மொத்தமுள்ள 650 இடங்களில் 412 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், 121 இடங்களை தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தோல்விக்கு முழு பொறுப்பேற்ற கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் ரிஷி சுனக், தனது பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்வதற்கு முன்பு பிரதமராக இறுதி உரையை ஆற்றினார் ரிஷி சுனக். அதில், இது ஒரு கடினமான நாள். இது உலகின் மிகச் சிறந்த நாடான பிரிட்டிஷின் மக்களுக்கு எனது முழு நன்றி என கூறினார்.
மேலும் பேசுகையில், நாட்டு மக்களுக்கு நான் முதலில் சொல்ல விரும்புவது, என்னை அனைவரும் மன்னிக்கவும். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் முழுவதுமாக செய்துவிட்டேன், ஆனால் நீங்கள் நாட்டின் அரசாங்கம் மாற வேண்டும் என்பதற்கான தெளிவான முடிவை எனக்கு சொல்லி இருக்கிறீர்கள். உங்களுடைய இந்த தீர்ப்பு முக்கியமானது. தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த முடிவைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமராக தனது இறுதி உரையில் ரிஷி சுனக் கூறினார்.