பிரிட்டன் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி.
பிரிட்டன் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி பெற்றுள்ளார். செஸ்டர் தொகுதி ஏற்கனவே தொழிலாளர் கட்சியிடம் இருந்த தொகுதி தான். இப்போது அதைத் தக்க வைத்துள்ளனர்.
தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் 61% வாக்குகளை பெற்று அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளருக்கு 22% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதில், ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்திருப்பது ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.