UK President Rishi Sunak [File Image]
UK தேர்தல்: பிரிட்டனில் ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தோல்விக்கு பின்னர், ” இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.” என பேசினார்.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (வியாழன்) காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெற்று இன்று (வெள்ளி) தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே பிரதான போட்டி நிலவி வந்தது.
இதில் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 114 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது. 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சி இதுவரை 409 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளில் ஆரம்பம் முதலே தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்து வந்தநிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் ரிஷி சுனக் தனது கட்சி தோல்வி குறித்தும், மக்களால் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் .
அவர் கூறுகையில், இந்தப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது, அவர்களது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். எனது வாழ்த்தை தெரிவிக்க தொழிலாளர் கட்சி பிரதமர் வேட்பாளர் கீர் ஸ்டார்மரை அழைத்தேன். இன்று பிரிட்டன் அதிகாரம் அமைதியாக நல்லெண்ணத்துடன் கைமாற உள்ளது. நமது நாட்டின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இந்த தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் கூறினார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…