பாகிஸ்தானில் தொடர்ந்து கலவரம்…இம்ரான் கானின் ஆதரவாளர்கள், பிரதமர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.!

PakPMProtest

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதானதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் பாக். பிரதமரின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நிலப்பரிமாற்ற ஊழல் வழக்கில் தேசிய பொறுப்புக் கழகத்தால் (என்ஏபி) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டின் லாகூர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல நகரங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் லாகூரில் உள்ள இல்லத்தில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள், பாக். பிரதமரின் மாடல் டவுன் லாகூர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனகளுக்கு தீ வைத்தனர். அவர்கள் பிரதமரின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர், மேலும் அங்குள்ள போலீஸ் சாவடிக்கும் தீ வைத்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து பெருமளவில் போலீஸ் குழு அங்கு சென்றடைந்ததால் பிடிஐ ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். பாகிஸ்தானின் பஞ்சாபில் கடந்த இரு நாட்களில் 14 அரசு கட்டிடங்கள் மற்றும் 21 போலீஸ் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தலைநகர் இஸ்லாமாபாத்திலும், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பாற்ற ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்