ஹோண்டுராஸின் பெண்களுக்கான சிறையில் கலவரம் வெடித்ததில், 41 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் பெண்களுக்கான ஒரே சிறையில், கலவரம் ஏற்பட்டதில் 41 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது நாட்டின் சிக்கலான சிறை அமைப்பில் நடந்த வன்முறை வெடிப்புகளில் ஒன்றாகும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அரசு வழக்கறிஞர் அலுவலக செய்தித் தொடர்பாளர் யூரி மோராவின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் பெரும்பாலானோர் எரிக்கப்பட்டுள்ளதாகவும், சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புலனாய்வாளர்கள் தேடுதலில் உள்ளதால் இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யூரி மோரா கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஹோண்டுரான் சிறைச்சாலை அமைப்பின் தலைவரான ஜூலிசா வில்லனுவேவா கூறும்போது, இந்த கலவர சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது திட்டமிடப்பட்ட சம்பவம் என்றும் நாட்டின் சட்ட மற்றும் தண்டனை அமைப்புகள் ஹைஜாக் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
18வது தெரு கும்பல் மற்றும் MS-13 கும்பல் ஆகிய இரண்டு போட்டி கிரிமினல் அமைப்புகளின் பெண் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையிலான பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்த சிறை மரணங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் கூறினார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…