சீனாவில் சமீபத்திய நாட்களில் சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது.
இதற்கு விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு, இப்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம். இருந்தாலும், புதியதாக எந்த வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்தது.
இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னதாக சீனா அனுபவித்து வந்த சுவாச நோய் பாதிப்பின் எண்ணிக்கைக்கு மத்தியில், தற்போது அனுபவித்து வரும் சுவாச நோய்களின் அதிகரிப்பு அதிகமாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரி மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் தடுப்புத் துறையின் செயல் இயக்குனர் மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து கூறுகையில், “கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய ஒப்பீடுகளை நாங்கள் பார்த்தோம். இப்போது பரவும் சுவாச நோய் 2018-2019 இல் பார்த்ததைப் போல அதிகமாக இல்லை. இது ஒரு புதிய நோய்க்கிருமியின் அறிகுறி அல்ல” என்று கூறினார்.
இதற்கிடையில் சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் பல குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது சீனாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தான் இந்த தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…