உக்ரைனின் பொது இடங்களிலிருந்து, ரஷ்ய சின்னங்கள் நீக்கம்.!
உக்ரைன் பொது இடங்களில் இருந்து ரஷ்ய நினைவுச்சின்னங்களை, உக்ரைன் அகற்றி வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பத்து மாதங்களாக நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது அதன் மின் ஆற்றல் அமைப்புகளின் மீது தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் உக்ரைனின் பல இடங்களில் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யாவின் கடைசியான தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக தடுத்து விட்டது.
இந்த நிலையில் உக்ரைனின் பொதுஇடங்களில் உள்ள ரஷ்ய நினைவுச்சின்னங்களை, உக்ரைன் மக்கள் அகற்றி வருகின்றனர். மேலும் பல தெருக்களின் பெயர்களையும் மாற்றி வருகின்றனர். உக்ரைனின் பல சாலைகளுக்கும், உக்ரைனின் புலவர்கள், கலைஞர்கள், மற்றும் போர் வீரர்களுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர்.
போர் அனைத்தையும் மாற்றி விட்டது, இந்த போரின் மூலம் உக்ரைன் மக்கள் நிறைய இழந்துவிட்டனர் என்றும் தற்போது ரஷ்யா சக்தி இழந்து விட்டது, அவர்களிடம் தாக்குதல் நடத்த எதுவும் இல்லை என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.