எலிகளுக்கு வரப்போகும் ஆபத்து..! நியூயார்க் நகரின் புதிய வேலை..!

Default Image

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக ஒரு அதிகாரியை நியமிக்க உள்ளது அந்த நகரத்தில் உள்ள எலிகளுக்கு மோசமான செய்தியாகவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் எலிகளின் அட்டகாசம் அதிகமான நிலையில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸின் புதிதாக எலிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரி வேலையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எலிகளை பிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த வேலையில் சேரும் நபருக்கு ஆண்டு வருமானம் 1,70,000 USD (இந்திய மதிப்பில் ரூ.1.38 கோடி)ஆகும்.

தினமும் 24 மணிநேரமும் பணியாற்ற கூடிய இந்த வேலையில் ஆர்வமுள்ளவர் சகிப்புத்தன்மை, நகர மக்களுடன் தொடர்பு, புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரியின் பொறுப்புகளில் எலி பிடிப்பதற்கான திட்டங்கள் மற்றும் அதற்க்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

நியூயார்க் நகர வாசிகளும் அரசாங்கமும் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நகரத்தின் தூய்மையை அதிகரிக்கவும், கொள்ளைநோய் பரவுவதைத் தடுக்கவும் உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நகரில் எலிகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை ஒப்பிடும் பொழுது 67 சதவீதம் அதிகமாகும். ஒவ்வொரு நான்கு நபர்களுக்கு ஒரு எலி என்ற விகிதத்தில் எலிகள் சுற்றித் திரிகின்றன.

நியூயார்க் நகரின் தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் சுற்றித் திரியும் எலிகளின் எண்ணிக்கை சுமார் 2 மில்லியன் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2021 அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பின் புதிய தகவலின்படி, முக்கிய அமெரிக்க மெட்ரோ நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான எலிகளைக் கொண்ட நகராக நியூயார்க் மூன்றாவது இடத்தில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்