இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்!

இலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எதிர்பாக்காத அளவுக்கு தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட, பொது செயலாளர் விராஜ் காரியவாசம் அவர்கள் கூறுகையில், ‘ரணில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விளக்க முடிவு செய்துள்ளார். கட்சியை மாரு கட்டமைப்பு செய்ய முடியும் என நம்புகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று நடைபெறும் செயல்வீரர் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025