அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

77 ஆண்டுகள் பழமையான திருமண கேக் இப்போது 2.40 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

queen elizabeth wedding

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வருவதும் அதனைப் பணம் கொடுத்து வாங்குவதும் நடந்து கொண்டு இருக்கும் இயல்பான விஷயமாக உள்ளது. ஏற்கனவே, அரசி எலிசபெத் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வகையைச் சேர்ந்த கார் 2.37 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

அதைபோல், அவர் பயன்படுத்திய டிபேக் கடந்த மாதம் ஆன்லைனில் 9லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வரிசையில், தற்போது அரசி எலிசபெத் திருமணத்தில் வெட்டப்பட்ட கேக் ரூ.2.40 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

கடந்த இளவரசி எலிசபெத்துக்கும் லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டனுக்கும் 1947 நவம்பர் 20-ஆம் தேதி அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது. அப்போது தான் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்குப் பிரமாண்ட கேக் ஒன்று அங்கு வெட்டக் கொண்டுவரப்பட்டது.

அந்த பிரமாண்ட கேக் 9 அடி உயரமும் 500 பவுண்டுகளையும் (சுமார் 227 கிலோ) எடை கொண்டிருந்தது. இந்தப் பெரிய கேக் 2,000 துண்டுகளாக வெட்டி, திருமண விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டு மிச்சம் துண்டுகள் அவர்களுடைய நியாபகார்த்தமாக வைக்கப்பட்டு இருந்தது. பாக்கெஜிங்கில் சுமார் 77 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் ஒரு நபர் அந்த கேக்கின் ஒரு துண்டை ரூ.2.40 லட்சத்திற்கு வாங்கி சென்றார். ஏலத்தில் வாங்கிய நபரின் பெயர் மற்றும் அவருடைய விவரம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், 77 ஆண்டுகளாகப் பழமையான கேக்கை அவர் இவ்வளவு செலவு செய்து வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக ஏற்கனவே , கடந்த 2013 -ஆம் ஆண்டு, இந்த கேக்- இன் இன்னொரு துண்டு Christie’s என்ற ஏலக் கழகத்தில் £1,750 (இந்திய மதிப்பின் படி சுமார் ரூ. 1.91 லட்சம்) என்ற விலைக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து மற்றொரு துண்டு இப்போது ரூ.2.40 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்