கடும் குளிர்.. வெறும் 10 நிமிடம் தான்.. ரஷ்ய சிறை பற்றி இறப்புக்கு முன்னரே கூறிய அலெக்ஸி நவல்னி.!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தவரும், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருமாக இருந்த அலெக்ஸி நவல்னி, தான் தண்டனை அனுபவித்து வந்த ஆர்டிக் பகுதி சிறைச்சாலையில் நேற்று உயிரிழந்தனர். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் சிறை அனுபவங்கள் பற்றி உச்சநீதிமன்றத்தில் கூறிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சிறை மாற்றம் :
புடினை கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கியமானவராக அலெக்ஸி நவல்னி பார்க்கப்படுகிறார். இவர் தீவிரவாத நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டில் 19 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இவர் ரஸ்யாவில் வேறு சிறையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் தான் கடும் குளிர் பகுதியான ஆர்டிக் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
டொனால்ட் டிரம்பிற்கு 2,900 கோடி ரூபாய் அபராதம்.! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
ஆர்டிக் சிறை :
மாஸ்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 1,900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யமலோ-நெனெட்ஸ் பகுதியில் இந்த சிறைச்சாலை அமைந்துள்ளது. டிசம்பர் , ஜனவரி மாதம் கடும் குளிர் காலத்தில் ஆர்க்டிக் பகுதி சிறைச்சாலையில் நவல்னி அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறைச்சாலையில் காலை நடப்பயணத்திற்கு பிறகு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், அதன் பின்னர் தனது சுயநினைவை இழந்ததாகவும் சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர் உயிரிழந்ததை சிறை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கடைசி புகைப்படம் :
இந்நிலையில், கடந்த ஜனவரி 10ஆம் தேதி தான் நவல்னி , ரஷ்ய நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் நவல்னி கடைசியாக உயிருடன் இருந்த புகைப்படம். அப்போது நீதிமன்றத்தில் தனது அனுபவங்கள் பற்றி நவல்னி பகிர்ந்துகொண்டுள்ளார்.
சிறை அனுபவங்கள் :
அவர் கூறுகையில், தனக்கு சிறையில் உணவு உண்பதற்கு 10 நிமிடம் மட்டுமே கால அவகாசம் இருக்கும் எனவும், 10 நிமிடங்களில் சாப்பிடுவது தனக்கு சாத்தியமில்லாத ஒன்று எண்டுறம், நீங்கள் ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்குள் சாப்பிட்டால், உணவுமுறை மற்றும் உடல்நிலை என்பது மிகவும் சிக்கலான செயல்முறையாக மாறிவிடும் என நவல்னி தெரிவித்துள்ளார்.
மேலும் , சிறையில் ஒரு சிறிய விதிமீறலில் ஈடுபட்ட காரணத்தால் தன்னை சிறை அதிகாரிகள் ஒரு சிறிய தண்டனை அறையில் தனிமைப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.
தான் தங்கி இருந்த சிறை அறை பெரும்பாலும் மிகவும் குளிராக இருக்கும். தினமும் செய்தி தாள் வரும். அது எதற்காக என்றால், அங்கு இருக்கும் கடும் குளிராக இருக்கும். அதனை தவிர்க்க இந்த செய்தி தாள் விரித்து தூங்குவதற்கு செய்தித்தாள் பயன்படுகிறது. இங்குள்ள சிறை அதிகாரிகள், தன்னிடம் இருக்கக்கூடிய புத்தக எண்ணிக்கையை வெகுவாக குறைத்தார்.
விதிமுறைப்படி நான் 10 புத்தகங்களை வைத்திருக்க அனுமதிக்கபடுகிறேன். ஆனால் எனக்கு 2 புத்தகங்கள் மட்டுமே கொடுத்தார்கள். எனக்கு அது போதாது, எனது அறையில் எனக்கு 10 புத்தகங்கள் இருக்க அனுமதிக்க வேண்டும். எனது கல்விக்கு புத்தகங்கள் தேவை, மத நடைமுறைகளுக்கு புத்தகங்கள் தேவை என ஜனவரி 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரான அலெக்ஸி நவல்னி தெரிவித்தார்.