ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவரும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆர்டிக் சிறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக கூறி நவல்னி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அலெக்ஸி நவல்னி மீது தீவிரவாத குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இந்த தண்டனை பெற்று வந்த காலத்தில் தான் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவில் தொடரும் போராட்டம்.! அலெக்ஸி நவல்னியின் உடலில் மர்ம காயங்கள்.?
அலெக்ஸி நவல்னி மரணத்திற்கு பின்னர், அவரது மனைவி யூலியா நவல்னயா வீடியோ மூலம் உரையாற்றுகையில், “என் கணவர் மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிய என்னுடன் அனைவரும் துணை நிற்க நான் உங்களை அழைக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரு விடுமுறை காலத்தில் துருக்கியில் சந்தித்தோம். இருவரும் உடனடியாக காதலித்ததாகக் கூறினர்.
பின்னர் உடனடியாக திருமணம் தற்போது எங்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அலெக்ஸியின் அரசியல் வாழ்க்கை தொடங்கும் வேளையில், அவருக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட கூடாது என தன்னால் முடிந்த அளவு அவரிடம் இருந்து விலகி விடடேன் என கூறினார்.
2020ஆம் ஆண்டு பல்வேறு எதிர்ப்புகள் அலெக்ஸி நவல்னி எதிர்கொண்டு, நான் அவருடன் வெளியூருக்கு சென்றேன். பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்குத் திரும்பிச் வந்த போது விமான நிலையத்தில் நவல்னி கைது செய்யப்பட்டார். அப்போது தான் நான் அவரை கடைசியாக அருகில் பார்த்தேன் என வருத்ததுடன் கூறினார். காவல்துறையினர் அவரை (அலெக்ஸி நவல்னி) அழைத்துச் செல்வதற்கு முன்பு நாங்கள் ஆரத்தழுவிக்கொண்டோம என்றார்.
கடைசியாக பிப்ரவரி 2022இல் சிறையில் அவரை சந்தித்ததாகவும், பின்னர் சிறையில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,கடிதம் மட்டுமே எழுதி பகிர்ந்து கொண்டதாகவும் அலெக்ஸி நவல்னி மனைவி கூறினார்.
அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு இருந்தாலும், அவரை மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன் என கூறினார். ஆனால் அதனை கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய சிறைச்சாலை அதிகாரிகள் பொய்ய்யாகிவிட்டானர் என கூறினர்.
எனது கணவரின் இறப்பு குறித்த உண்மையான தகவல்களை அதிபர் புடின், புடினின் நண்பர்கள் மற்றும் அவரது அரசாங்கம் வெளியில் கூற வேண்டும். அவர்கள் நம் நாட்டிற்கு, என் கணவருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை என் குடும்பத்திற்கு, அவர்கள் தெரிவித்து தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
புடின் எனது குழந்தைகளின் தந்தையைக் கொன்றுள்ளார். புடின் என்னிடம் இருந்த மிக நெருக்கமான மற்றும் மிகவும் பிரியமான நபரை எடுத்துச் சென்றார் என்று அலெக்ஸி நவல்னிமனைவி நவல்னாயா வீடியோ மூலம் நேற்று கூறினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…