ஆஸ்திரேலிய பொதுப் பள்ளிகளில், விரைவில் பஞ்சாபி மொழி.!
ஆஸ்திரேலியாவின் பொதுப்பள்ளிகளில் விரைவில், பஞ்சாபி மொழி கற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பொதுப் பள்ளிகளில், மாணவர்களுக்கு பஞ்சாபி மொழி விரைவில் கற்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர், சூ எல்லேரி தெரிவித்துள்ளார். பள்ளிப்பாடத்திட்டத்தில் பஞ்சாபி மொழி, அறிமுகப் படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பஞ்சாபியை புதிய மொழியாக ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.
பஞ்சாபி பாடத்திட்டத்தின் வளர்ச்சி குறிப்பாக, எதிர்காலத்தில் முக்கிய வேலை வாய்ப்புகளில் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும்” என்று எல்லேரி கூறினார். ஆஸ்திரேலியாவில் பஞ்சாபி, வேகமாக வளர்ந்து வரும் மொழியாக மாறியுள்ளது இது ஆஸ்திரேலியாவில் 239,000 க்கும் அதிகமான மக்கள் வீட்டிலேயே பயன்படுத்துகின்றனர்.
2016 உடன் ஒப்பிடும்போது 2021 இல் பஞ்சாபி பேசுபவர்களின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் தமிழ், இந்தி மற்றும் கொரிய மொழிகள் அடங்கிய பாடத்திட்டத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலிய பள்ளிகளில் பஞ்சாபி மொழி கற்பிப்பதற்கான நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது.