உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

Most Corruption Countries - CPI Ranking

உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

ஊழல் தரவரிசையில் 100க்கு 90 மதிப்பெண் எடுத்து டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.  அதற்கடுத்து 87 மதிப்பெண்கள் எடுத்து பின்லாந்து இரண்டாம் இடத்திலும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து அணி 3ஆம் இடத்திலும் உள்ளன.   84 மதிப்பெண்களுடன் நார்வே 4ஆம் இடத்திலும், சிங்கப்பூர் 83 மதிப்பெண்களுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன.

6ஆம் இடத்தில ஸ்வீடன் 82 மதிப்பெண்களுடனும், சுவிட்சர்லாந்து 82 மதிப்பெண்களுடன் 7ஆம் இடத்திலும், நெதர்லாந்து 79 மதிப்பெண்களுடன் 8ஆம் இடத்திலும், ஜெர்மனி 78 மதிப்பெண்களுடன் 9ஆம் இடத்திலும், மற்றும் லக்சம்பர்க் 78 மதிப்பெண்களுடன் 10ஆம் இடத்திலும் உள்ளன என 2023 ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் குறைந்த ஊழல் உள்ள நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதே போல கடைசி இடத்தில்,  சோமாலியா 11 மதிப்பெண்களுடன், வெனிசுலா 13 மதிப்பெண்களுடனும், சிரியா 13 மதிப்பெண்களுடனும், தெற்கு சூடான் 13 மதிப்பெண்களுடனும், ஏமன் 16 மதிப்பெண்களுடனும் கடைசி இடங்களை பிடித்துள்ளன. கடைசி இடங்களை பெற்றுள்ள நாடுகள் போர் தாக்குதல்கள் காரணமாக நீண்டகாலமாக பொருளாதார ரீதியிலும் பின்தங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது இந்தியா 39 மதிப்பெண்களுடன், 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் கூற்றுப்படி 40 மதிப்பெண்களுடன் 85வது இடத்தை இந்தியா பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்