கோவிட்-19க்கான பொது சுகாதார அவசர நிலை! அமெரிக்கா நீட்டிப்பு.!
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பொது சுகாதார அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா துணை வகையான XBB.1.5 தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வேகமாக பரவி வருவதால், பல நாடுகளும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்த XBB.1.5 வைரஸின் பரவலை குறைக்கும் பொருட்டு அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுகாதாரத் துறை COVID-19 தொற்றுநோயின் நிலையை, பொது சுகாதார அவசரநிலையாக நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்க மக்கள் இலவச கொரோனா சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை தொடர்ந்து பெற முடியும்.
மேலும் முதன்முதலில் கொரோனா 2019இல் உலகமெங்கும் பரவத்தொடங்கிய போது, அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை அதிபர் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில், ஜனவரி 2020 இல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.