UK:₹6,917,739,780 மதிப்புடைய வான் கோ ஓவியத்தின் மீது தக்காளி சூப்பை ஊற்றிய போராட்டக்காரர்கள்
பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று காலநிலை எதிர்ப்பாளர்கள் லண்டனின் நேஷனல் கேலரியில் போராட்டம் நடத்தினர்.
எரிபொருள் பிரித்தெடுப்பதை எதிர்த்து அருங்காட்சிகத்தில் வைக்கப்பட்டிருந்த டச்சு கலைஞரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான வான் கோவின் “சூரியகாந்தி” ஓவியம் மீது தக்காளி சூப்பை ஊற்றிய சமபவம் நிகழ்ந்துள்ளது.
அதிஷ்டவசமாக ஓவியம் கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு எதிர்ப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
1880 களின் பிற்பகுதியில் வான் கோ வரைந்த “சூரியகாந்தி”யின் பல பதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.இந்த ஓவியம் கிட்டத்தட்ட $84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையது.