பிரான்ஸில் போராட்டம்..! 667 பேர் கைது, 200 போலீஸ் அதிகாரிகள் காயம்..!
பிரான்ஸில் 17 வயது இளைஞன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 667 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில், கடந்த 27ம் தேதி நடந்த போக்குவரத்து சோதனையின் போது 17 வயது இளைஞன் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து, பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர், கொல்லப்பட்ட இளைஞனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்கள் சாலையில் இருந்த கார்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்ததோடு, காவல்துறை அதிகாரிகள் மீது பட்டாசுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
The absolute state of France.
Import the Third World, become the Third World. #FranceRiots pic.twitter.com/OapCbkuFoQ— Paul Golding (@GoldingBF) June 30, 2023
காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தாக்குதலில் 294 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், பிரான்ஸ் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
Cette nuit, nos policiers, gendarmes et sapeurs-pompiers ont encore fait face, avec courage, à une rare violence.
Conformément à mes instructions de fermeté, ils ont procédé à 667 interpellations.
— Gérald DARMANIN (@GDarmanin) June 30, 2023