ஈரானில் தொடரும் போராட்டம்.. இளம் பெண் 6 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை.. அதிர்ச்சியில் மக்கள்..
ஈரானில் 20 வயது பெண் முகம், கழுத்து மற்றும் மார்பில் 6 முறை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் மஹ்சா அமினி(22) என்ற பெண் முறையற்ற ஹிஜாப் காரணமாக ஈரானின் அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கொள்ள பட்டத்தையடுத்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது.
இன்று வரை போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தனது நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தெருக்களில் இறங்கிய ஹதீஸ் நஜாபி(20) என்ற இளம் பெண், 6 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் இந்த இளம் பெண்ணின் மார்பு, முகம், கை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
This 20 Yr old girl who was getting ready to join the protest against the murdering of #MahsaAmini got killed by 6 bullets.#HadisNajafi, 20، was shot in the chest, face and neck by Islamic Republic’s security forces.
Be our voice.#مهسا_امینیpic.twitter.com/NnJX6kufNW— Masih Alinejad ????️ (@AlinejadMasih) September 25, 2022