சீனாவில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்று கட்டாயம்
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செவ்வாயன்று ஜப்பாநில கொரோனாவுக்கு எதிரான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளார்.
அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு எதிரான தற்காலிக அவசர நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவும் என்றும் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளார்.
எதிர்மறையான கொரோனா சோதனை முடிவுகள் கட்டாயம் என்றும்,நேர்மறையான சோதனை முடிவுடன் சீனாவிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார்,
சீனா தனது “பூஜ்ஜிய-கோவிட்” கொள்கையை பெருமளவில் கைவிட்ட பிறகு, சீனா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலையடைவதாக கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.