வழிவிட்ட வானிலை… லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் முன்னேற்றம்!

கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், இப்பொது காற்றின் வேகம் சற்று குறைந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Los Angeles Fire

சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு காரணம் காற்று தான், பலத்த காற்று காரணமாக தீ பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு விழுந்துள்ளது.

அங்கு கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் எரிந்து வரும் காட்டுத்தீ பகுதிகள் உட்பட கடலோர தெற்கு கலிபோர்னியா வரை காற்றின் வேகம் குறையாமல் இருந்து வந்ததால், தீயணைப்பு வீரர்களுக்கு பெரிய சவாலாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், இப்பொது காற்றின் வேகம் சற்று குறைந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயால் நாசமான 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளும் அடங்கும். அதே நேரத்தில், பாலிசேட்ஸ் கிழக்கு பகுதியில் எரியும் காட்டுத் தீயை 17 சதவீதமும், ஈடன் தீயை  34 சதவீதமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், அமெரிக்க பெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி, கலிபோர்னியாவில் 8.4 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பேரிடர் உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்