74 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்த பேராசிரியர்.!

அமெரிக்கா: புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் 74 நாட்கள் காற்றழுத்த தாழ்வு இல்லாமல் நீருக்கடியில் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஜோசப் டிடுரி என்பவர் மார்ச் 1 அன்று இந்த பயணத்தைத் தொடங்கி, தற்பொழுது 74 நாட்களாக நீருக்கடியில் ஜூல்ஸின் அண்டர்சீ லாட்ஜில் வசித்து வருகிறாராம். புளோரிடாவின் கீ லார்கோவில் 30 அடி கடல் ஆழமான அடிப்பகுதியில் அவரது லாட்ஜ் அமைந்துள்ளது.
View this post on Instagram
73 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்த இரண்டு பேராசிரியர்களின் முந்தைய உலக சாதனையை ஒரு நாட்கள் அதிகமாக இருந்து முறியடித்துள்ளார். மேலும், அவரது சாதனை நாட்கள் இன்னும் முடிவடையவில்லை. அவர், ஜூன் 9ம் தேதி வரை அந்த லாட்ஜில் தங்கி 100 நாட்களை கடக்க திமிட்டுள்ளாராம்.
View this post on Instagram
இதற்கிடையில், அவர் நீருக்கடியில் இருக்கும்போது மருத்துவ நிபுணர்களால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார் .அவ்வப்போது, தனது சிறுநீரக மாதிரிகளை மருத்துவர்களிடம் சோதனை செய்து கொள்கிறர். இது தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
View this post on Instagram