ஃபேஸ்புக்கில் சிக்கல்! திடீரென்று மில்லியன் ஃபாலோவர்ஸை காணவில்லை!
ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நேற்று ஒரே இரவில் ஃபேஸ்புக் பக்கத்தில் அனைத்து ஃபாலோவர்களையும் குறைத்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கின் ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, லட்சக்கணக்கான மக்களின் பின்தொடர்பவர்களைக் (ஃபாலோவர்களை) குறைந்துள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கும் விதிவிலக்கல்ல.
அவரது ஃபாலோவர்களும் தற்போது 9993 ஆகக் குறைந்துள்ளது. இது குறித்து பல பயனர்களும் தங்களது புகார்களை பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒருவேளை ஃபேஸ்புக்கில் உள்ள பொய்யான பயனர் கணக்குகளை மூடுவதற்கான செயல்பாடு என்றால், மார்க் ஸுக்கர்பர்க்கின் ஃபாலோவர்களும் பொய்யான கணக்குகளை வைத்திருந்தவர்களா?(ஃபேக் ஃபாலோவர்களா?) என்ற கேள்வி எழுந்துள்ளது.
What is the problem in @facebook , everyone’s followers are being seen less than millions of followers and many profiles are not opening, what is the problem, Facebook is down.@fbsecurity @facebookapp @Meta #facebookdown
— Adnan Waxiri (@Adnan_Wxr) October 12, 2022
@facebook @Meta @MetaNewsroom Post about the sudden decrease in followers on Facebook were seen from many friends. Is this a technical glitch or something else??
— Nikhilesh Mishra (Nikhil) (@NikhileshOnline) October 12, 2022