இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம்! பிரிட்டனின் புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் பதவியேற்பு!!
பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் ராணி, 96 வயதில் காலமானார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இருப்பினும், சார்லஸின் முறையான முடிசூட்டு விழாவிற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.
கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி 6, 1952 இல் பதவியேற்றார். 16 மாதங்களுக்குப் பிறகு, அவரது முடிசூட்டு விழா ஜூன் 2, 1953 அன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.