ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

pm modi and Ebrahim Raisi

சென்னை : ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர்  மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த மீட்புப் படை துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நிலையில், 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த இடம் கண்டுபிடிக்கபட்டு அதில் பயணம் செய்த யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. விபத்தில்  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, பொதுமக்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி  மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

pm modi and Ebrahim
pm modi and Ebrahim / @pm modi

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” ஈரான் குடியரசின் தலைவர் டாக்டர் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy