அரசு முறை பயணமாக அபுதாபி சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

NarendraModi - AbuDhabi

பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபு தாபி சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சையதை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி. பின்னர், அங்கு இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கு முன்னதாக, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு நேற்று சென்றடைந்தார். பாரிஸில் நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்