முதன்முறையாக ஈரான் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி! சந்திப்பில் நடந்தது என்ன?

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் மிக நல்ல சந்திப்பு நடந்தது என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Pezeshkian pm modi

இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாடுகளிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு

இந்த சூழலில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, ரஷ்யாவின் கஜன் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் அழைப்பு விடுத்தது இருந்தார். எனவே, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்காக ரஷ்யா சென்றபோது தான் பிரதமர் மோடி , ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியனை சந்தித்துப் பேசியுள்ளார்.

சந்திப்பில் நடந்தது என்ன? 

இந்த சந்திப்பின் போது, ​​இந்தியா-ஈரான் இருதரப்பு உறவுகள் மற்றும் அதை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் பெஜேஷ்கியன் ஆகியோர் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒத்துழைப்பின் பல முக்கிய பகுதிகளில், இரு தலைவர்களும் சாபஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் அல்லது INSTC போன்ற மூலோபாய திட்டங்கள் பற்றியும் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அத்துடன், “பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் பெசெஷ்கியானை இந்தியாவுக்கு விரைவில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்” பிரதமர் மோடி கொடுத்த நெகிழ்ச்சியான அழைப்பை “அதிபர் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் ஈரானின் அதிபராக மசூத் பெசெஷ்கியன் பதவியேற்ற பிறகு அவர்களது முதல் சந்திப்பு இதுவாகும். கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்குப் பிறகு அவர் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி ட்வீட்

மேலும், சந்தித்தபோது, எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் அதில் ” ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் மிக நல்ல சந்திப்பு நடந்தது. எங்கள் நாடுகளுக்கு இடையேயான முழு அளவிலான உறவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். எதிர்காலத் துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” எனக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்