நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.!
பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடன் சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக ஜப்பான்,உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் ஜப்பானில் ஜி-7 உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு நேற்று பப்புவா நியூகினியா விற்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் அங்கு அவர் டோக் பிசின் மொழியில் தமிழில் மிகவும் உன்னதமான நூலான திருக்குறளை வெளியிட்டார்.
இதனை முடித்துக்கொண்டு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கூறிய மோடி, இந்தியா-நியூசிலாந்து உறவுகள் பற்றி விவாதித்தோம். இரு நாடுகளுக்கிடையே வணிக மற்றும் கலாச்சார தொடர்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.<
PM @narendramodi held a productive meeting with PM @chrishipkins. The leaders reviewed entire spectrum of India-New Zealand bilateral ties. pic.twitter.com/Pp3AgKxY2P
— PMO India (@PMOIndia) May 22, 2023
/p>
பிரதமர் மோடி இந்த பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புறப்பட்டார்.