பிரதமர் மோடி தான் பாஸ் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார், அங்கு சிட்னியில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான கலாச்சார விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை, ஆஸ்திரேலிய பிரதமர் புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பிரதமர் மோடி தான் பாஸ் (“தலைமையாளர்”) என்று கூறினார்.
மேலும் பேசிய அல்பனீஸ், பிரதமர் மோடி பிரபலமாக உள்ளதை, மற்றொரு பிரபலம் அமெரிக்க பாடகரான ராக்ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன் ஒப்பிட்டார். ரசிகர்கள் மத்தியில் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுக்கு ” தி பாஸ்” என்ற பெயர் உண்டு. சிட்னி மைதானத்தில் மோடியைப் பார்த்ததும் எழுந்த, வந்தே மாதரம், மோடி மோடி, பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட முழக்கங்கள் மற்றும் மோடிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த அல்பனீஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை விட மோடிக்கு புகழ் அதிகம் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்தார். நீங்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ள விரும்பினால், ரயிலிலும் பேருந்திலும் பயணம் செய்யுங்கள் என்று கூறினார். மார்ச் மாதம் நான் இந்தியாவில் இருந்தபோது, குஜராத்தில் ஹோலி கொண்டாடியது, டெல்லியில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்தது, மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த பயணமாக இருந்தது.
பிரதமராக தனது முதல் ஆண்டை இன்று கொண்டாடுவதாகவும், நான் எனது நண்பரான பிரதமர் மோடியுடன் மேடையில் நிற்பது மிகவும் சிறப்புமிக்க தருணம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…