பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

இந்தியா அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 52 சதவீதம் வரி போடுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

narendra modi donald trump

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். இதனை அமெரிக்க நேரப்படி (ஏப்ரல் 2), 2025 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டிரம்ப் அறிவித்தார்.

எதற்காக எந்த வரி?

இந்தியா அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 52 சதவீதம் வரி போடுகிறது. அதனால், நாமும் இந்தியப் பொருட்களுக்கு வரி போடுகிறோம். ஆனால், அவர்கள் போடுவதை விட பாதி, அதாவது 26 சதவீதம் மட்டுமே போடுகிறோம். இது “பரஸ்பர வரி” (reciprocal tariff) எனவும் டிரம்ப் விளக்கம் அளித்தார். இந்தியப் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று சொன்னாலும், “இந்தியா நம்மை சரியாக நடத்தவில்லை” என்று குற்மும் சாட்டினார்.

வேறு எந்த நாடுகளுக்கு வரி?

இந்தியாவைத் தவிர, டிரம்ப் மற்ற நாடுகளுக்கும் வரி அறிவித்துள்ளார். அதன்படி, சீனாவுக்கு – 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு – 20 சதவீதம், தென் கொரியாவுக்கு – 25 சதவீதம் எனவும் ஜப்பானுக்கு – 24 சதவீதம், தைவானுக்கு – 32 சதவீதம் எனவும் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு உணவு பொருட்கள் (பருப்பு, அரிசி போன்றவை), ஆடைகள், மருந்துகள், நகைகள், கார் பாகங்கள், மின்னணு பொருட்கள் போன்றவை அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. இப்போது 26 சதவீதம் வரி வந்தால், இவை அமெரிக்காவில் விலை ஏறிவிடும். அதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி சுமார் 3-5 சதவீதம் குறையலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இது அமெரிக்காவின் தொழிற்சாலைகளை மீட்டெடுக்கவும், அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றவும் செய்யும் திட்டம்.” அமெரிக்காவில் உள்ளூர் பொருட்களை மக்கள் வாங்க ஊக்குவிக்கவே இந்த வரி எனவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.  மேலும், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த 26 சதவீத வரி ஏப்ரல் 9, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, அடுத்த வாரம் முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்