ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்.! உள்நாட்டு போர் குறித்து ஆலோசனை.?
ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்து ஆலோசித்து உள்ளார். அப்போது ரஷ்யா உள்நாட்டு போர், உக்ரைன் நாட்டுடனான போர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இருநாட்டு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் கலந்து ஆலோசித்ததாக வெளியுறவு துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், இரு நாட்டு தரப்பும் தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கி, இரு நாட்டு முன்னேற்றம் குறித்தும் தலைவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, இரு நாட்டு நலன் மட்டுமல்லாது உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் புதின் மற்றும் பிரதமர் மோடி விவாதித்தனர்.
இந்தியா – ரஷ்யா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதற்கும் இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக ஒப்பு கொண்டனர். இந்த உரையாடலில் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண ரஷ்ய அதிபர் புடினிடம் மோடி வலியுறுத்தினார் என்றும், வாக்னர் உள்நாட்டு போர் குறித்தும் வெளியுறவு துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.