நாட்டை விட்டு தப்பிய பிரதமர்.. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! நடந்தது என்ன?

Bangladesh pm

வங்கதேசம் : பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு ஹெலிகாப்டரில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

தியாகிகளின் வாரிசுகளுக்கான 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் நடந்த போராட்டம் கலவரமானது. இடஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், ஹேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பாதுகாப்பு கருதி அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு வந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக, ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். தற்பொழுது, ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாகவும், மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என உஸ்-ஜமான் உறுதியளித்துள்ளார்.

மேலும், இடஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவர், ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்துள்ளார். அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் மகள் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்