“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!
உக்ரைன் அமைதியை நாடுகிறது. போர் தொடர்வதற்கு ஒரே காரணம் ரஷ்யா தான் என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள்ளார்.

கீவ் : உக்ரைன் – ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை எதிர்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு, இருவருக்கும் இடையேயான காரசார வாக்குவாதம், அதன் பிறகான அடுத்தடுத்த நிகழ்வுகள் என அரசியல் சூழல் அரங்கேறி வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஜெலென்ஸ்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், ” உக்ரைன், போர் ஆரம்பித்த நாள் முதலே போரில் இருந்து விலகி அமைதியை தான் நாடுகிறது. இந்த போர் இன்னும் தொடர்வதற்கு ஒரே காரணம் ரஷ்யா தான். இதனை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
உக்ரைனின் பகுதிகளை பாதுகாத்து, ஆக்கிரமிப்பாளர்களை ஊடுருவுவதை உறுதி செய்து, உக்ரைன் அமைதியை நெருங்குவதற்குத் தேவையான பலத்தை நம் நாட்டிற்கு வழங்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு படைகளுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.” என பதிவிட்டுள்ளார்.
Ukraine has been seeking peace since the very first second of the war, and we have always said that the only reason it continues is Russia.
I am grateful to every unit and every brigade defending Ukraine’s positions, ensuring the destruction of the occupiers, and making every… pic.twitter.com/Msi96V5Q5O
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 10, 2025
உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்த போவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அமெரிக்காவுடனான கனிம வள ஒப்பந்தத்திற்கு ஜெலென்ஸ்கி சம்மதம் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு கடந்த வாரம் இங்கிலாந்து நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் சவூதி அரேபிய மன்னருடனும் அமெரிக்க பிரதிநிதிகள் உடனும் போர் நிறுத்தம் குறித்து ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழல் ஜெலென்ஸ்கியின் இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.