இலங்கையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்.! தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு

Sri Lanka President Ranil Wickremesinghe

இலங்கையில் நாளை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

1948 சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் சிங்களத்தவர்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கி, அதன் பின்னர் சிங்கள மொழி ஆட்சிமொழி என அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு உள்நாட்டு போர் ஏற்பாடும் அபாயம் வரை சென்றது. இதனை தடுக்க, அப்போது 13வது சட்ட திருத்தம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு, ஜூலை 29ஆம் தேதி மறைந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அப்போதைய இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோர் இடையே கையெழுத்திடப்பட்டது.

இந்த சட்டத்திருத்ததின் கீழ், அரசியல், அரசு பணிகள், அதிகர்ப்பங்கீடு என தமிழர்களுக்கு உரிமை கோரும் வகையில் 13வது சட்டத்திருத்தம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் தற்போது அவர் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் தான் இலங்கையில் உள்நாட்டு போர் அதிகரிக்க துவங்கியது.

தற்போது 13வது சட்டத்திருத்தம் அமல்படுத்தபடவேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இலங்கைக்கு சென்ற போது கூட 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூலை 20ஆம் தேதி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது 13வது சட்டத்திருத்தம் பற்றிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறித்து.

இதனை முன்னிட்டு தற்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ் கட்சி அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்மக்கள் முன்னணி புறக்கணிக்கிறது. அவர்கள் 13வது சட்ட திருத்தம் மூலம் அதிகார பகிர்வு மட்டும் தமிழாக்களுக்கு போதாது. மேலும் சில விதிமுறைகள் வேண்டும் என கோரினார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்