“அமெரிக்காவுக்கு பொற்காலம்., மஸ்க்-கிற்கு நன்றி!” நாடாளுமன்றத்தில் டிரம்ப் முதல் உரை!
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் தற்போது முதல் முறையாக அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தொடரில் உரையாற்றினார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தொடரில் உரையாற்றினார். இந்த உரையில் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அதிக வரி விதி, உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும், உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும் டிரம்ப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல டிரம்ப் பேசுகையில், அமெரிக்கா திரும்ப வந்துவிட்டது. அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கிவிட்டது என தனது உரையை தொடங்கினார். மேலும், பெரிய கனவுகள் மற்றும் தைரியமான செயல்களுக்கான நேரமிது என்றும், ஒவ்வொரு நாளும் எனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறேன் எனவும் தனது உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தொடரில் இது எனக்கு 5வது உரை. இங்கு ஜனநாயக கட்சியினரை (எதிர்க்கட்சி) நான் பார்க்கிறேன். அவர்களை மகிழ்விப்பதற்கோ, அவர்களிடம் இருந்து கைதட்டல் பெறுவதற்கோ என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் ஆட்சியில் அமெரிக்கா அழிவை நோக்கி சென்றது. அதனை என்னால் குணப்படுத்த முடியும். இந்த வெற்றிக்கு மஸ்க் முக்கிய காரணம். நீங்கள் (மஸ்க்) மிகவும் கடினமான உழைத்தீர்கள். அவருக்கும் இந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனை அனைவரும் பாராட்டுகின்றனர் என டிரம்ப் தெரிவித்தார்.
இந்த வார இறுதியில், அமெரிக்காவில் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கையை நான் முன்னெடுப்பேன். இந்தியா, தென் கொரியா, கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா போன்ற நாடுகள் விதிக்கும் இறக்குமதி கட்டணங்களை நியாயமற்றது என்று கூறிய டொனால்ட் டிரம்ப், தனது உரையில் அமெரிகாவின் புதிய வரி விதிப்புகள் குறித்து பேசினார். கடந்த 4 ஆண்டுகளில், 21 மில்லியன் (2.1 கோடி) மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025