“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப்புக்கு ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை கூறினார்.
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். அமெரிக்கத் தேர்தல் விதிமுறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பேற்கவேண்டும்.
எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தன்னுடைய தொண்டர்கள் முன்னிலையில், அதிபராக டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரை உற்சாகமாக வரவேற்றார்.
வெள்ளி மாளிகைக்கு அவர் வருகை தந்தபோது ஜோ பைடன் ” அமெரிக்கத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து உங்களை மீண்டும் வெள்ளி மாளிகைக்கு வரவேற்கிறேன். நான் சொன்னதுபோல அமெரிக்காவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல வேலைகள் செய்வோம். அதற்கு எங்களுடைய உதவி எப்போதும் உங்களுக்கு இருக்கும்” என நெகிழ்ச்சிப்பட தெரிவித்தார்.
ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டொனால்ட் டிரம்ப் ” நீங்கள் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் என்பது கடினமான ஒரு வேலை. என்னுடைய இந்த ஆட்சியில் மக்களுக்குப் பயன்படக்கூடிய பல விஷயங்களை நான் கொண்டு வருவேன்” எனவும் டொனால்ட் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்து உறுதியளித்தார்.
மேலும், இருவரும் சந்தித்தபோது பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜோ பைடன் டொனால்ட் டிரம்ப்புக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு பைடனின் மனைவி கையால் எழுதிய வாழ்த்து கடிதத்தையும் டிரம்பிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.