சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்! தப்பியோடிய அதிபர்! தேடும் பணிகள் தீவிரம்…
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றும் முன்னர் அதிபர் பஷார் அல்-அசாத் தனி விமானத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
டமாஸ்கஸி : சிரியா நாட்டில் உள்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றி விட்டனர். அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை முழுதாக கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகரை விட்டு தனிவிமானம் மூலம் தப்பி சென்றுள்ளார்.
இதனால் தப்பி சென்ற சிரியா நாட்டு அதிபரை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவம் மற்றும் உளவுத்துறை மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் அந்நாட்டு செய்தி நிறுவனங்களின் தகவலின்படி அதிபர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்னர், கடைசியாக புறப்பட்ட விமானம் இலியுஷின்-76 விமானம், சிரியன் ஏர் 9218 என்ற விமானம் என ஏதேனும் ஒன்றில் அல்-அசாத் ஏறிச் சென்று தப்பித்து இருக்கலாம் என்றும்,
இந்த விமானம் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கி பறந்தது, பின்னர் வடக்கு நோக்கிச் சென்றது என்றும் ஆனால், அந்த விமானத்தின் சிக்னல் என்பது வானில் இருந்த சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தது என தகவல் வெளியாகி உள்ளது. அசாத் தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் கூறி , சுதந்திரம் என்று அறிவித்தனர். இதனால் தற்போது அங்கு சிரியா நாட்டு அதிபரின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்றும் அறிவித்துள்ளனர்.
இப்படியான சூழலில் தான், அதிபர் தப்பி சென்ற விமானம் திடீரென்று காணாமல் போனதாலும், அதன் பறக்கும் உயரம் திடீரென குறைந்ததாலும், அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அசாத்தை ஏற்றிச் சென்ற விமானம் ரேடாரில் இருந்து மறைந்து, லெபனான் வான்வெளிக்கு வெளியே சில நிமிடங்களில் 3,650 மீட்டர் உயரத்தில் இருந்து 1,070 மீட்டர் உயரமாக திடீரென கீழே விழுந்தது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரபரப்பட்டு வருகின்றன . அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டால் மட்டுமே திடீரென உயரம் குறைந்து இருக்கும் என கூறப்படுகிறது.