இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால், காசா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம், காச பகுதியில் மிசாரத்தை துண்டித்துள்ளதோடு, அங்கு உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
காஸாவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு, இஸ்ரேல், எகிப்து நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஸாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், காஸாவில் உள்ள மக்கள் நிலை குறித்து ஐநா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், காஸாவில் 50,000 கர்ப்பிணிகள் உணவு, மருத்துவ சேவை மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். காசா நகரத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.2400 கோடி தேவைப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், காஸாவில் உச்சகட்ட மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. அதே சமயம், காஸாவில் மின்விநியோகம் தொடர வேண்டும் என்றால், இஸ்ரேல் பிணைய கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…